சீன ஊடகக் குழுமம், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் ஆகியவை இணைந்து தயாரித்த சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் பொருளாதாரச் சிந்தனை பற்றிய விளக்கம் எனும் 14 அத்தியாயங்களைக் கொண்ட சிறப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி 2025ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் நாளிரவு ஒளிபரப்பப்படும். ஷிச்சின்பிங்கின் பொருளாதாரச் சிந்தனையை முறையாக விளக்கும் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி இதுவாகும்.
புதிய வளர்ச்சிக் கருத்துக்களைச் செயல்படுத்துவது, புதிய வளர்ச்சி நிலைமையை உருவாக்குவது, உயர்தர வளர்ச்சியை முன்னேற்றுவது, உயர்தர உற்பத்தி திறனை வளர்ப்பது ஆகியவை குறித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் முக்கிய கருத்துக்களில் இந்நிகழ்ச்சி கவனம் செலுத்துகின்றது.
புதிய யுகத்தில் சீனா பெற்றுள்ள முக்கிய பொருளாதார வளர்ச்சி சாதனைகள் மற்றும் வரலாற்று மாற்றங்களில் ஷிச்சின்பிங் சிந்தனையின் தலைமைப் பங்குகளை இந்நிகழ்ச்சி எடுத்துக்கூறுகின்றது.