ஜி20 உச்சி மாநாடு: தென்னாப்பிரிக்காவில் இருந்து தமிழில் ட்வீட் செய்த மோடி  

Estimated read time 1 min read

ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்கச் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள இந்திய வம்சாவளியினரின் கலாசார நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்ததுடன், அவர்களின் உணர்வுகளைப் பாராட்டித் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு கணபதி பிரார்த்தனை மற்றும் சாந்தி மந்திரத்துடன் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் வெளியிட்ட பதிவில், ஜொகன்னஸ்பர்கில் தென்னாப்பிரிக்காவின் கிர்மிட்டியா பாடலுடன் ‘கங்கா மையா’ நிகழ்ச்சியைக் கண்டது தனக்கு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்தப் பாடலின் மற்றொரு சிறப்பம்சம், அது தமிழில் பாடப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

You May Also Like

More From Author