சிரியாவில் உள்ள தனது தூதரக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை நேற்று நடத்தியது.
இதனையடுத்து, இது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தும் என்று அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேலின் வேண்டுகோளின் பேரில் பாதுகாப்பு கவுன்சில் இன்று மாலை 4:00 மணிக்கு (2000 GMT) கூட்டத்தை நடத்த உள்ளது.
ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் சேர்ந்து இஸ்ரேல் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியதால் இஸ்ரேல் மீது 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன.