சீனா தொடர்பான ஜப்பானிய தலைமையமைச்சர் சானே தகைச்சியின் தவறான கருத்துக்கள் குறித்து சீன அரசின் நிலைப்பாட்டை விளக்கி கூறும் வகையில், ஐ.நாவில் உள்ள சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூ சொங் ஐ.நா. தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு நவம்பர் 21ஆம் நாள் ஒரு கடிதம் அனுப்பினார்.
இந்தக் கடிதத்தில் அவர் கூறுகையில், அண்மையில் ஜப்பானிய நாடாளுமன்றக் கூட்டத்தின்போது ஜப்பானிய தலைமையமைச்சர் சானே தகைச்சி தைவான் குறித்து ஆத்திரமூட்டல் தன்மை வாய்ந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இது, 1945ஆம் ஆண்டில் ஜப்பான் போரில் தோல்வியடைந்த பிறகு ஒரு ஜப்பானிய தலைவர், “சீனாவின் தைவான் பிரதேசத்திற்கு எதிராக இராணுவப் படையை சீனப் பெருநிலப்பகுதி பயன்படுத்தினால், ஜப்பானிய தற்காப்புப்படை கூட்டு தற்காப்பு உரிமையைப் பயன்படுத்த முடியும்” என்ற கருத்துக்களை அதிக்காரப்பூர்வமாக வெளியிடுவது இதுவே முதன்முறையாகும். தைவான் விவகாரத்தில் இராணுவ ரீதியாகத் தலையிடுவதற்கான தனது உள்நோக்கத்தை அந்நாட்டு தலைவர் ஒருவர் வெளியிட்டு, சீனா மீது இராணுவ மிரட்டல் விடுப்பது இதுவே முதன்முறையாகும். இதற்கு சீனா கடுமையான மனநிறைவின்மையையும் வலுவான எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது என்றார்.
மேலும், ஜப்பான் இராணுவ முறையில் தைவான் விவகாரத்தில் தலையிட்டால், இது ஆக்கிரமிப்பு செயலாக மாறும். ஐ.நா சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி, சீனா சொந்த நாட்டின் இறையாண்மையையும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டையும் உறுதியுடன் பேணிகாக்கும் என்றும், 2ஆவது உலகப் போரில் தோல்வியடைந்த நாடான ஜப்பான், வரலாற்று குற்றங்களை சுயசிந்தனை செய்யவும், தைவான் குறித்த அரசியல் வாக்குறுதியைக் கடைபிடிக்கவும், தவறான கருத்துக்களைத் திரும்ப பெறவும் வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்தக் கடிதம் ஐ.நாவின் அதிகாரப்பூர்வ ஆவணமாக அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
