COP30க்கு சீனப் பிரதிநிதிக் குழுவின் முயற்சிகள்
அண்மையில் பிரேசிலில் நிறைவடைந்த காலநிலை மாற்ற சமாளிப்புக்கான ஐ.நாவின் 30ஆவது உச்சி மாநாட்டில் அரசியல் ரீதியிலான சாதனைகள் படைக்கப்பட்டன. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மெளநீங் அம்மையார் 24ஆம் நாள் கூறுகையில், சீன அரசு இந்த மாநாட்டில் அதிக கவனம் செலுத்துகின்றது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் துணைத் தலைமையமைச்சருமான டிங் சுவெசியாங், சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியாக இம்மாநாட்டில் பங்கேற்றார்.
மாநாட்டின்போது டிங் சுவெசியாங் உரைநிகழ்த்தியபோது, சரியான திசையை உறுதிப்படுத்துதல், காலநிலை மாற்ற சமாளிப்புக்கான நடைமுறைகளை செயல்படுத்துதல், திறப்பு மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்குதல் என மூன்று அம்ச முன்மொழிவுகளை முன்வைத்தார் என்றும், சீனப் பிரதிநிதிக் குழு விரிவாகவும் ஆழமாகவும் பல்வேறு அம்ச பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்தாய்வுகளில் கலந்து கொண்டதோடு, மாநாட்டில் ஆக்கப்பூர்வமான சாதனைகள் படைக்கபடுவதை ஊக்குவித்தது என்றும் தெரிவித்தார்.
