விழுப்புரம் : தைலாபுரத்தில் சித்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “பிகாரில் போட்டி என கூறிய அன்புமணி மொரீசியஸ், தென்கொரியாவிலும் போட்டியிடுவார், அன்புமணியை என்றைக்கு கட்சியை விட்டு நீக்கினோமோ அன்றைக்கே எல்லாம் முடிந்துவிட்டது. பாமக எங்களுக்குத்தான் சொந்தம் என சொல்வது வெட்கமாக உள்ளது.
நாங்கள்தான் பாமக எனக் கூறிக்கொண்டு ஒரு கும்பல் சுற்றுகிறது. கட்சி தொடர்பான ஆவணங்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம், பை, பையாக பொய் வைத்துக் கொண்டு பேசுவோரின் வேஷம் கலைந்துவிட்டது. ஏன் பொய் சொன்னோம் என்று வருந்தும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்போகிறோம்.
பீகாரில் போட்டியிடுவதாக போலி ஆவணங்கள் கொடுத்து மாம்பழம் சின்னம் பெற்ற அவர்களின் வேஷம் கலைக்கப்படும். டிசம்பர் முதல் வாரத்தில் 10.5% இட ஒதுக்கீட்டிற்காக வன்னியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்” என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.