தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டதிலிருந்து, அவர் பொதுநிகழ்வுகளில் காணப்படாமல் இருந்ததையடுத்து, அவரது அடுத்த நகர்வுகள் குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ளன.
சமீப நாட்களாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்களுடன் அண்ணாமலை சந்திப்புகளில் ஈடுபட்டு வருகிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து, தனிக்கட்சி தொடங்கவுள்ளீர்களா எனக் கேட்கப்பட்டதற்கு, “ஆரம்பிக்கும்போது சொல்றேன்” என்ற பதிலை அவர் அளித்ததுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பிக்கும் போது சொல்றேன்னு
சொல்லிட்டு ஒரு சிறிப்பு சிரிச்சாருங்க
அதான் அண்ணன்…
#Annamalai pic.twitter.com/JS6CJnKuNT— Santhosh Krishnan (@sashkrish18) September 23, 2025
“>
அண்ணாமலையின் இந்த பதில், பாஜகவின் தேசிய தலைமையிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அவருக்கு தேசிய அளவிலான பொறுப்புகள் வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வரை எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த பதில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.