சீனாவும் அமெரிக்காவும், இரு நாட்டு சுங்க வரி நடைமுறை நிறுத்தத்தை மேலும் 90 நாட்கள் நீட்டித்துள்ளன.
இரு தரப்பின் பொருளாதார உறவில் ஒன்றுக்கொன்று நலன் குறைவு மற்றும் தொடர்புடைய பொருளாதாரப் பாதுகாப்பு பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், அமெரிக்கா சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் அண்மையில் நீட்டிப்பு பற்றிய கட்டளையில் தெரிவித்தார்.
சீனத் தலைவர்களுடனான சீரான உறவையும் டிரம்ப் வற்புறுத்தினார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் லின் ஜியேன் ஆகஸ்ட் 12ம் நாள் கூறுகையில், சீன-அமெரிக்க ஸ்டாக்ஹோம் பொருளாதார வர்த்தகப் பேச்சுவார்த்தை குறித்த தகவலை சீன வணிகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சீன-அமெரிக்க உறவிலும், இரு நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சினையிலும், சீனாவின் நிலைப்பாடு நிலையாகவும் தெளிவாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.