செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஆளும் யுனைடெட் ரஷ்யா கட்சியின் மாநாட்டில் அதிபர் விளாடிமிர் புதின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றினார்.
அப்போது, உக்ரைன் போர் மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில், ரஷ்யா தற்போது ஒரு “கடினமான காலகட்டத்தை” கடந்து செல்வதாக அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், நாடு இந்த சவால்களை நிச்சயம் முறியடித்து, தேசிய பாதுகாப்பையும் எல்லைகளின் இறையாண்மையையும் பலப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் புதின் பரபரப்பு உரை
