வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘டிட்வா’ புயலை எதிர்கொள்ள அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் மாவட்டங்களில் உள்ள திமுக நிர்வாகிகள் மக்களுக்கு உதவத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள திமுகவினர் களத்தில் துணையாக நின்று, பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கித் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
