டெல்லியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். பிரபல அரசியல் விமர்சகர் ஆடிட்டர் குருமூர்த்தியும் உடன் இருந்ததாக தெரிகிறது.
NDA கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்து திமுகவில் இணைவார் என்ற பேச்சு பரவிய சூழலில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவ் அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றார். உள்துறை அமைச்சகத்தின் அவசர அழைப்பின் பேரில் கேரள மாநிலம் கொச்சி வழியாக நேற்று இரவு ஓபிஎஸ் டெல்லி சென்றதாக சொல்லப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து டிடிவி தினகரனோடும் பாஜக தலைமை விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
