ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று ஈரோடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
கடந்த ஆண்டு தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது தொடரப்பட்ட 6 வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், மீண்டும் வரும் மார்ச் 9-ஆம் தேதி அவரை ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சீமான், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மாற்றி மாற்றி ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொள்வது ஒரு வழக்கமான வேடிக்கை என்று விமர்சித்தார்.
மேலும், அதிமுக மற்றும் பாமக இடையே உருவாகியுள்ள கூட்டணி தாம் ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறிய அவர், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ஏன் 3,000 ரூபாய் வழங்கப்படவில்லை என்ற கேள்வியையும் தமிழக அரசை நோக்கி முன்வைத்தார்.
