18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி நிறைவடையும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார்.
9 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு அமர்வில், மக்களவையின் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், மேலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) பதவியேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ராஜ்யசபாவின் 264வது கூட்டத்தொடர் ஜூன் 27 முதல் ஜூலை 3, 2024 வரை நடைபெறும்.
மக்களவை தேர்தலை அடுத்து, குறைந்த பலத்துடன் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகு நடைபெறும் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இதுவாகும்.
ஜூன் 27 அன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுவார்.