சீனத் தேசிய அந்நிய செலாவணி பணியகம் அண்மையில் 2024ம் ஆண்டின் 4வது காலாண்டு மற்றும் முழு ஆண்டின் சர்வதேச வரவு செலவு சரிசம நிலை பற்றிய தகவலை வெளியிட்டது. 2024ம் ஆண்டில் சீனாவின் சர்வதேச வரவு செலவு அடிப்படையாக சரிசமமாக உள்ளது. சரக்கு வர்த்தகத்தின் சாதக நிலுவைகள், வரலாற்றில் புதிய நிலையை எட்டியுள்ளது. சேவை வர்த்தகப் பற்றாக்குறை சிறியளவில் அதிகரித்தது.
இத்தகவலின்படி, 2024ம் ஆண்டில் சீனாவின் இரு வழி நாடு கடந்த மூலதனப் புழக்கம் ஒழுங்காக உள்ளது. உள்நாட்டு நிறுவனங்கள், தங்கள் வெளிநாட்டு சொத்துகளை உரிய முறையில் பரவல் செய்துள்ளன. சீனாவிலுள்ள நேரடி அந்நிய முதலீடு அதிகரித்தது. தற்போது சீனாவின் உயர்தர வளர்ச்சி முன்னேறி வரும் நிலையில், சர்வதேச வரவு செலவு, தொடர்ந்து சரிசம நிலையை நிலைநிறுத்தக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
படம்:CFP
சர்வதேச வரவு செலவில் சரிசம நிலையை எட்டிய சீனா
