பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். புரோடக்ஷன்ஸின் தயாரிப்பாளரும், ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாரின் மகனுமான ஏ.வி.எம். சரவணன் (86), வயது மூப்பின் காரணமாக இன்று (டிச. 4) காலை 5:30 மணியளவில் காலமானார்.
சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். பல சூப்பர் ஸ்டார் நடிகர்களை உருவாக்கிய ஏ.வி.எம். நிறுவனத்தை ஏற்று நடத்திய பெருமைக்குரியவர் ஏ.வி.எம். சரவணன்.
தற்போது அவரது மகன் எம்.எஸ். குகன் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார். அவரது மறைவுக்குத் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
