செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு பற்றி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு சார்பில், ஏப்ரல் 25ஆம் நாள் பிற்பகல் கூட்டுப் பயிலரங்கு நடைபெற்றது.
இந்தப் பயிலரங்கிற்கு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் தலைமை வகித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தற்போதைய சூழ்நிலையில், நன்மை பயப்பது, பாதுகாப்பு, நியாயம் ஆகியவற்றைக் கொண்ட திசையை நோக்கி, சீனாவின் செயற்கை நுண்ணறிவின் சீரான மற்றும் ஒழுங்கான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.