சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், தனது மனைவி பெங் லீயுவான் அம்மையாருடன் ஆகஸ்டு 26ஆம் நாள் முற்பகல், கம்போடிய மன்னர் நோரோடோம் சிஹாமோனி மற்றும் தாய் ராணி நோரோடோம் மோனிநாத் சிஹானூக் அம்மையாரைச் சந்தித்து பேசினார்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில், சிக்கலான சர்வதேச நிலைமையில், சீனாவும் கம்போடியாவும் உறுதியுடன் ஒன்றிணைத்து, பாரம்பரிய நட்புறவைப் பரவல் செய்து, ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, புதிய யுகத்தில் அனைத்து காலநிலைக்கும் ஏற்ற இரு நாட்டுப் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை விரைவுபடுத்தி, இரு நாட்டு மக்களுக்கு மேலதிக நலன்களைத் தரும் வகையில் செயலாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
