படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் அப்பாஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகிற்குத் திரும்புகிறார்.
அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கும் ‘ஹேப்பி ராஜ்’ என்ற புதிய படத்தில் ஜிவி பிரகாஷ்குமாருடன் இணைந்து அவர் நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்தில் நாயகியாக லவ்வர் படத்தில் நடித்து பிரபலமான ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார்.
மரியா இளஞ்செழியன், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு ‘ஹேப்பி ராஜ்’ எனப் பெயரிடப்பட்டதற்கான காரணத்தையும் இயக்குநர் விளக்கி உள்ளார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரைக்குத் திரும்புகிறார் அப்பாஸ்
