சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகப் பொறுப்பாளர்கள் காணொளி மூலம் உரையாடல்

சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தகத்தின் சீனத் தரப்புப் பொறுப்பாளரும், சீனத் துணைத் தலைமையமைச்சருமான ஹே லீஃபெங், அமெரிக்கத் தரப்புப் பொறுப்பாளரும், அமெரிக்க நிதி அமைச்சருமான ஸ்காட் பெசென்ட் மற்றும் வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீருடன் டிசம்பர் 5ஆம் நாளிரவு காணொளி மூலம் தொடர்பு கொண்டார். சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் பூசன் நகரில் சந்தித்த போதும், நவம்பர் 24ஆம் நாள் தொடர்புக் கொண்டபோதும் எட்டிய ஒத்தக் கருத்துக்களைச் செயல்படுத்துதல், அடுத்த கட்டத்தில் பயனுள்ள ஒத்துழைப்புகளை மேற்கொள்தல், பொருளாதார மற்றும் வர்த்தகத் துறையில் தத்தமது அக்கறை கொண்ட விவகாரங்களை உகந்த முறையில் தீர்த்தல் ஆகியவை குறித்து, இரு தரப்பினரும் ஆழமாகப் பரிமாற்றிக் கொண்டனர்.

இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிக்காட்டலுடன், சீன-அமெரிக்கப் பொருளாதார மற்றும் வர்த்தக கலந்தாய்வின் பங்காற்றி, இரு நாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்று இரு தரப்பினரும் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author