நடிகர் சிலம்பரசன் (STR) மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை ‘STR 49’ என்று குறிப்பிடப்பட்டு வந்த இத்திரைப்படத்திற்கு, தற்போது ‘அரசன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதோடு, ‘அரசன்’ படத்தின் முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) போஸ்டரும் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
போஸ்டரில் சிலம்பரசன் இரத்தத்தால் நனைந்த சட்டையுடன் காட்சியளிக்கிறார். அவர் கையில் கத்தியை ஏந்தி, ஒரு சைக்கிளுக்கு அருகில் நிற்பது போன்ற தோற்றம் அமைந்துள்ளது.
STR – வெற்றிமாறன் இணையும் ‘STR 49’-க்கு ‘அரசன்’ எனப் பெயரிடப்பட்டது!
