தமிழக முதல்வரின் முதல் தனிச்செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ், நேற்று தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார்.
அவர் இடத்தில் தற்போது உமாநாத் IAS பதவி ஏற்கிறார்.
முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் யார்? அவரை பற்றி சில தகவல்கள்.
ஏற்கனவே முதல்வர் மு.க. ஸ்டாலின் தனிச்செயலாளர்களில் ஒருவராக பணியாற்றி வந்தவர் தான் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத்.
2001-ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சியடைந்த உமாநாத், 2010-ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தவர்.
அப்போது அவர் மேற்கொண்ட ஏராளமான நலத்திட்டங்கள் மற்றும் சீரமைப்புப் பணிகள் தான் அவரை முதல்வரின் தனி செயலாளராக முதல்வரே தேர்வு செய்யும் அளவிற்கு கொண்டு சேர்த்தது.
முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளராக உமாநாத் ஐஏஎஸ் நியமனம்
