சீன அரசவை ஹாங்காங் மற்றும் மக்கௌ விவகார அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் 8ஆம் நாள் வெளியிட்ட உரையில், ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 8ஆவது சட்டமியற்றல் குழு தேர்தல் 7ஆம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இத்தேர்தல் பாதுகாப்பாகவும் சீராகவும் நடைபெற்றது. ஹாங்காங்கின் முழு சமூகம் இத்தேர்தலில் மிகுந்த கவனம் செலுத்துவதை இது வெளிகாட்டியுள்ளது. ஹாங்காங் மக்களே ஹாங்காங்கை ஆளுவதிலிருந்து மறுமலர்ச்சி முன்னேற்றப்போக்கில் ஹாங்காங் நடைபோடுவதையும் இது காட்டியுள்ளது. இது மட்டுமல்லாமல், “ஒரு நாட்டில் 2 அமைப்பு முறைகள்” என்ற கொள்கை, அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் ஹாங்காங்கின் அடிப்படை சட்டம், ஹாங்காங்கின் நடைமுறையில் உயர் தர ஜனநாயகம் முதலியவற்றுக்கும் பொருந்தியது. மேலும் இத்தேர்தல் மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்தது. இத்தேர்தல் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன் என்றார்.
