பல்வேறு வர்த்தகக் கூட்டாளி நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பரம் வரியை மாற்றி அமைக்கவுள்ளதாக அமெரிக்கா ஏப்ரல் 2ஆம் நாள் அறிவித்துள்ளது.
இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் 3ஆம் நாள் கூறுகையில், அமெரிக்காவின் இக்கொள்கைக்குச் சீனா உறுதியாக எதிர்ப்பு தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.
அதோடு, நாட்டின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பேணிக்காக்கும் வகையில் அமெரிக்காவின் இக்கொள்கைக்கு எதிரான தடை நடவடிக்கைகளைச் சீனா உறுதியாக மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
வரிகளை உயர்த்துவதால் மட்டும் அமெரிக்காவின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. மாறாக இச்செயல் அமெரிக்காவின் சொந்த நலன்களுக்குத் தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி, உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியின் நிதானத்தையும் பாதிக்கும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
