அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் அமெரிக்க இளைஞர்கள் சீனாவில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள நிலையில், அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தின் மாண்ட்கோமெரி மாவட்டத்தின் இளைஞர் பிக்கிள் பால் பண்பாட்டுப் பரிமாற்ற குழுவினர்கள் அண்மையில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டனர்.
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அண்மையில் இக்குழுவினருக்கு வாய் மொழி பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், உங்கள் சீனப் பயணம் வெற்றிப் பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். இளைஞர்கள், சீன-அமெரிக்க உறவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். நீங்கள் இரு நாட்டு நட்புறவுக்கான புதிய தூதர்களாக செயல்பட வேண்டும் என விரும்புவதாக தெரிவித்தார்.