நாடு முழுவதும் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை தொடர்ந்து 7வது நாளாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இன்று மட்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 71 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக விமானங்கள் ரத்து செய்யப்படுவதால், விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, இண்டிகோ நிறுவனம் மாற்று விமானங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர் விமான ரத்து காரணமாக சென்னை விமான நிலைய பகுதிகளில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
சென்னையில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து: 7வது நாளாக சேவை பாதிப்பு
