தமிழ்நாடு மிக மிகப் பாதுகாப்பாக இருப்பதால்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
நெல்லையில் பேசிய அவர், “அவர் எப்படி உயிரோடு தமிழ்நாடு பூரா சுத்தி வராரு? தெருத்தெருவா போறாரு? ஊர் ஊரா சுத்துறாரு? பாதுகாப்பாதானே இருக்காரு. அவர் வீட்ல இருக்கறவங்கல்லாம் பாதுகாப்பாதான இருக்காங்க? என்ன ஆபத்து வந்துச்சு?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், ஜெயலலிதா கடைசி காலம் வரை வாழ்ந்த கோடநாடு பங்களாவைக் கூடப் பாதுகாக்க முடியாத நிலையில் தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி இருந்ததாகவும் குற்றம் சாட்டினார். “சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசுகிற யோக்கியதை எடப்பாடிக்குக் கிடையவே கிடையாது,” என்று ஆர்.எஸ். பாரதி கடுமையாக விமர்சித்தார்.
