சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி டிசம்பர் 3ஆம் நாள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சாராத பிரமுகர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தியது. இதில், பல்வேறு ஜனநாயக கட்சிகளின் பிரமுகர்கள், அனைத்து சீனத் தொழிற்துறை மற்றும் வணிகத் துறை சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள், கட்சி சாரா பிரமுகர்கள் ஆகியோரிடம், இவ்வாண்டின் பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் அடுத்த ஆண்டின் பொருளாதாரப் பணி குறித்து கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்பட்டன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமைத் தாங்கி முக்கிய உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், சீனப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிக்கான ஆதரவு மற்றும் போக்கு மாறாது. நம்பிக்கையை அதிகரித்து, மேம்பாடுகளைச் சரியாகப் பயன்படுத்தி, சவால்களைச் சமாளித்து, பொருளாதாரத்தின் நிதானமான வளர்ச்சிப் போக்கினை வலுப்படுத்தி, 15வது ஐந்தாண்டுத் திட்டவரைவின் நல்ல துவக்கத்தை நனவாக்க வேண்டும் என்றார்.
