சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் முக்கிய சர்வதேசப் பொருளாதார அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன் சந்திப்பு

சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 9ஆம் நாள், பெய்ஜிங்கில் நடைபெற்ற “1+10” உரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்ட உலக வங்கி தலைவர் அஜய் பாங்கா, சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் கிரிஸ்டாலினா ஜார்ஜிவா, ஐ.நாவின் வர்த்தக மற்றும் வளர்ச்சிக் கூட்டத்தின் செயலாளர் கிரைன்ஸ்பான் முதலியோருடன் லீச்சியாங் முறையே சந்திப்பு நடத்தினார்.

 

அப்போது லீச்சியாங் கூறுகையில்,

 

ஐ.நாவை மையமாக கொண்ட சர்வதேச கட்டமைப்புக்கும் பல்வேறு சர்வதேச பொருளாதார நிறுவனங்களின் பணிக்கும் சீனா உறுதியாக ஆதரவளிக்கிறது. பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, 4 முக்கிய உலகளாவிய முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தி, உண்மையான பலதரப்புவாதத்தை செயல்படுத்தி, நியாயமான ஒழுங்கான உலக பன்முகப்படுத்தலையும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தின் உலகமயமாக்கலையும் சீனா விரைவுபடுத்தும் என்றார்.

You May Also Like

More From Author