ஒடிசா மாநில எம்.எல்.ஏ.க்கள் கடந்த சில ஆண்டுகளாக சம்பள உயர்வை கோரிய நிலையில், அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சம்பள உயர்வு மசோதா மாநில சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தற்போது எம்.எல்.ஏ.க்கள் பெறும் மாத சம்பளம் ரூ.1.11 லட்சமாக உள்ளது. புதிய மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இது ரூ.3.45 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனுடன், முதல் மந்திரி, அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோரின் சம்பளமும், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெறும் ஓய்வூதியத் தொகையும் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது பதவியில் உள்ள எம்.எல்.ஏ. ஒருவர் உயிரிழப்பின் பட்சத்தில், அவரது குடும்பத்திற்குப் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2024 ஜூன் மாதத்தில் பொறுப்பேற்ற 17வது சட்டசபை தொடங்கிய நாளிலிருந்தே இந்த சம்பள உயர்வு அமலில் வரும் என சட்டசபை அறிவித்துள்ளது.
