32ஆவது பெய்ஜிங் சர்வதேச வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக் கண்காட்சி 23ஆம் நாள் துவங்கியது. சீனத் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம், சீன ஊடகக் குழுமம் ஆகியவற்றின் வழிகாட்டலில் சீன ஒலிபரப்புச் சர்வதேசப் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கண்காட்சி பல்லூடகம், யுஎச்டி, நுண்மதி ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டு 26ஆம் நாள் வரை நடைபெறுகின்றது.
உலகளவில் 20க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்கெடுத்துள்ளன. இவற்றில் உலக முன்னணியில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியுள்ளது. 200க்கும் அதிகமானவை வெளிநாட்டு நிறுவனங்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.