சீனத் தேசிய குடியேற்ற நிர்வாகம் 16ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவுக்கு வந்த மற்றும் வெளியேறிய பயணிகளின் எண்ணிக்கை 33 கோடியே 30 இலட்சமாக இருந்தது. இது, கடந்த ஆண்டை விட 15.8 விழுக்காடு அதிகரித்துள்ளது. விசா நீக்கம் சலுகை கொள்கையின் மூலம், சீனாவுக்கு வந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 36 இலட்சத்து 40 ஆயிரமாக இருந்தது. சீனாவுக்கு வந்த வெளிநாட்டவர்களில் இது 71.2 விழுக்காட்டை வகித்து, கடந்த ஆண்டை விட 53.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.