நீங்கள் ஒவ்வொருவரும் 10 இளைஞர்களை உங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மாஸா, கெத்தா இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். உன்களை பார்க்கும்போது 50 ஆண்டுகள் டைம் ட்ராவல் செய்து பின்னால் சென்றத்போல் இருக்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் 10 இளைஞர்களை உங்களுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு அரசியல் உணர்வுகளை நம்முடைய கொள்கைகளை திராவிட மாடல் அரசின் சாதனைகளை கொண்டு சேர்க்க வேண்டும். கடந்த கால ஆட்சியில் நடந்த தவறுகளை குற்றங்களை, துரோகங்களை மக்களுக்கு நினைவுபடுத்துங்கள்.

அமித்சா அவர்களே… நீங்கள் அல்ல… உங்கள் சங்கிப் படையையே கூட்டிட்டு வந்தாலும் உங்களால் இங்க ஒன்னும் பண்ண முடியாது. இது தமிழ்நாடு. உதயநிதி Most Dangerous என கொள்கை எதிரிகள் புலம்பும் அளவிற்கு இறங்கி அடிக்கிறார், தம்பி உதயநிதி தனது பொறுப்பை உணர்ந்து பவர் புல்லா செயல்படுகிறார். அன்போடு வந்தால்
அரவணைப்போம், ஆணவத்தோடு வந்தால் அடி பணிய மாட்டோம். பிற்போக்கு கருத்துகள் தொற்று நோய் போல் பரவும். இந்தியாவிலேயே பாஜகவுக்கு எதிராக Ideological Fight செய்யக்கூடிய ஒரே மாநிலக் கட்சி திமுகதான்… ஏ தாழ்ந்த தமிழகமே என கவலைப்பட்ட காலத்தை மாற்றி இப்போது திரும்பி பாருங்கள் தமிழ்நாட்டை என சொல்லுகிற காலத்திற்கு நாம் வந்துள்ளோம்” என்றார்.
