ஈராக்கின் தெற்குப் பகுதியில் பாயும் டைக்ரிஸ் நதிக்கரையில், மாவீரன் அலெக்சாண்டரால் உருவாக்கப்பட்ட ‘டைக்ரிஸ் நதியில் அலெக்ஸாண்ட்ரியா’ என்ற பழங்கால நகரம் சுமார் 2,300 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மெசபடோமியாவையும் பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் முக்கிய வணிகத் துறைமுகமாகத் திகழ்ந்த இந்த நகரம், காலப்போக்கில் மண்ணுக்குள் மறைந்து போனது.
தற்போது உயர் தொழில்நுட்ப ட்ரோன்கள் மற்றும் புவி இயற்பியல் ஸ்கேன்கள் மூலம் சுமார் 6.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான இந்த நகரைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த நகரத்தில் உள்ள கட்டிடங்களின் சுவர்கள் மற்றும் சாலைகள் சிதையாமல் மிகவும் பாதுகாப்பாக இருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா நகரம் உலகப் புகழ்பெற்றது என்றாலும், ஈராக்கில் உள்ள இந்த நகரம் வெறும் புராணக் கதையாகவே கருதப்பட்டு வந்தது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தத் தளம், அந்தக் காலத்தில் மிகச்சிறந்த வர்த்தக மையமாகவும் பாதுகாப்பு அரணாகவும் செயல்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது. தொல்பொருள் பேராசிரியர் ஸ்டீபன் ஹவுசர், இந்த நகரத்தின் கட்டமைப்புகள் வியக்கத்தக்க தரத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
