வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோயிலில் குடியரசு தலைவர்திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தார்.
வேலூர் மாவட்டம், அரியூர் அடுத்த ஸ்ரீபுரத்திற்குக் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகைத் தந்தார்.
திருப்பதியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீபுரத்திற்கு வருகைத் தந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் காந்தி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், தங்கக்கோயிலில் உள்ள ஸ்ரீநாராயணி அம்மனை, குடியரசு தலைவர்
தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, ஆயிரத்து 800 கிலோ எடைக் கொண்ட வெள்ளி விநாயகர், சொர்ணலட்சுமி, பெருமாள் ஆகிய கோயில்களில் குடியரசு தலைவர் வழிபாடு நடத்தினார்.
இதனை அடுத்து, மகாலட்சுமி மற்றும் வைபவ லட்சுமிக்குப் பூஜை செய்த திரௌபதி முர்மு, சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார்.
பின்னர், கோயில் வளாகத்தில் மரக்கன்றுவை நட்டு வைத்த குடியரசு தலைவர், மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டுச் சென்றார்.
