கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என்றும், அன்றைய தினம் சிலுவைப் பாதை மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28ஆம் தேதி காலைத் திருவிழா திருப்பலி மற்றும் தேர்ப்பவனி முடிந்தவுடன் கொடி இறக்கத்துடன் விழா நிறைவுபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வருடாந்திர திருவிழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
