தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்று மாறுபாடு மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதலே கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாணவர்கள் மழையில் நனைந்தபடியே பள்ளிக்குச் சென்றனர்.
தொடர் மழையினால் பள்ளி வளாகங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியதால், மாணவர்களின் நலன் கருதி 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று (டிசம்பர் 17) அரை நாள் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
