சீனாவின் ஹாய்நான் தாராள வர்த்தக துறைமுகத்தில் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் தீவு முழுவதிலும் சிறப்பு சுங்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. புதிய யுகத்தில் சீனாவின் வெளிநாட்டுத் திறப்பு பணிக்குத் தலைமை வகிக்கும் முக்கிய வாயிலாகத் திகழும் இலக்கை நோக்கி, ஹாய்நான் முக்கிய காலடி எடுத்து வைத்துள்ளது. சீனா, உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பு பணிகளை விரிவாக்கி, திறப்பு தன்மை வாய்ந்த உலக பொருளாதாரத்தின் கட்டுமானத்தை முன்னெடுக்கும் சின்னமாக, இந்த சிறப்பு சுங்க நடவடிக்கைகள் திகழ்கின்றன.
ஹாய்நான் தீவு முழுவதிலும் சிறப்பு சுங்க நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்த பின்னர், வர்த்தக முதலீட்டுத் துறையில், தாராளமயமாக்கமும் வசதிமயமாக்கமும் மேலும் உயரும். இதற்கிடையில், வரி இல்லாத பொருட்களின் எண்ணிக்கை, இறக்குமதி பொருட்களின் வகைகள் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். இறக்குமதி செலவு பெருமளவில் குறைவது, பன்னாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பது உறுதி. சீனா, தொடர்ந்து வெளிநாட்டுத் திறப்புப் பணிளை விரிவாக்கி, உலகத்துடன் ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறும் மனவுறுதியும் ஆற்றலும் மாறாது.
பூஜியம் வரி, குறைந்த வரி விகிதம், எளிமையான வரிவிதிப்பு முதலியவற்றால், தொழில் நிறுவனங்கள், குறைந்த உற்பத்தி செலவுடன் மேலதிக நலன்களைப் பெறும். பன்னாட்டுச் சுற்றுலா பயணிகளும், ஹாய்நான் தீவின் சிறப்பு சுங்க நடவடிக்கைகளால் அதிகளவில் பயனடைவர். பொருளாதாரத்தின் உலகமயமாக்கமும் பெரிதும் முன்னெடுக்கப்படும்.
படம்:VCG
