பிரதமர் மோடிக்கு ஓமான் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு  

Estimated read time 1 min read

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கானத் தனது அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஓமான் நாட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமான்’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதினை ஓமான் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மஸ்கட்டில் உள்ள அல் பராக்கா அரண்மனையில் வைத்துப் பிரதமருக்கு வழங்கினார்.
இந்த உயரிய விருதினை இதற்கு முன்பு முக்கியமான உலகத் தலைவர்களான நெல்சன் மண்டேலா, இரண்டாம் ராணி எலிசபெத், ஜப்பான் பேரரசர் அக்கிஹிட்டோ மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோர் பெற்றுள்ளனர்.
இதன் மூலம் இந்தச் சிறப்புமிக்க விருதைப் பெறும் மிகச் சில உலகத் தலைவர்களில் ஒருவராகப் பிரதமர் மோடி மாறியுள்ளார்.

You May Also Like

More From Author