மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், இதையொட்டி நடத்தப்பட்ட முகூர்த்தக்கால் நடும் விழாவில் மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா, மாற்று மத அடையாளத்துடன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா விமர்சையாக நடைபெற்றது. 17 ஆண்டுகள் கழித்து நடைபெற உள்ள கும்பாபிஷேகத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி நடைபெற்ற முகூர்த்த கால் நடும் விழாவில் எம்எல்ஏக்கள் முஸ்தபா, தங்கபாண்டியன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், மாற்று மதத்தைச் சேர்ந்த எம்எல்ஏ முஸ்தபா, அதற்கான அடையாளத்துடன் பங்கேற்றதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அவர் கடந்த காலங்களில் சனாதனம் குறித்து தெரிவித்த கருத்துகளை சுட்டிக்காட்டி, அவருக்கு இந்து முன்னணி கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது.
