மதுரை திருப்பரங்குன்றத்தில் சந்தனகூடு கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனகூடு நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பரங்குன்றம் கோட்டை தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இதனையறிந்த பாஜக, இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் திருமண மண்டபத்தின் முன்னர் குவிந்தனர். அப்போது அங்கு வந்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க முயன்றார்.
அதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் ஹெ.ராஜா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து போலீசார் அனுமதித்ததையடுத்து, கைதானவர்களை ஹெச்.ராஜா சந்தித்து பேசினார்.
