சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீனத் தலைமை அமைச்சருமான லீச்சியாங் டிசம்பர் 22ஆம் நாள் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் வரைவுப் பணிக்கான குழு கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் சுட்டிக்காட்டுகையில், தற்போது இவ்வரைவுப் பணிக்கு சீரான அடிப்படை உருவாகியுள்ளது. இதையடுத்து அதன் திருத்தம் மற்றும் மேம்பாட்டுப் பணியில் கவனம் செலுத்த வேண்டும். உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவதென்ற தலைப்பைச் சுற்றி இலக்குகளை வகுத்து கொள்கைகளை ஏற்பாடு செய்து திட்டப்பணிகளை திட்டமிட வேண்டும் என்றார்.
மேலும் இத்திட்டத்தின் வரைவுப் பணி ஜனநாயக முறையில் பொது கருத்துக்களை ஒன்றிணைந்து பல்வேறு தரப்புகளின் முன்மொழிவுகளை உணர்ச்சிப்பூர்வமாகக் கேட்டறிந்து பல்வேறு தரப்புகளின் விவேகத்தைத் திரட்டி கூட்டு ஆற்றலாக உருவாக்க வேண்டும் என்று லீச்சியாங் வலியுறுத்தினார்.
