அண்மையில் டியேன் ஜின் மாநகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவை முன்வைத்து.
பதற்றமான உலகிற்கு, ஆட்சி முறை பற்றிய ஒரு சிந்தனை கட்டுக்கோப்பையும் செயலுக்கு வழிகாட்டியையும் வழங்கினார். மேலும் நியாயமான சர்வதேச ஒழுங்கிற்கு இது ஒரு சிறப்பு தீர்வை அளித்துள்ளது.
உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவு, சர்வதேச ஒழுங்கு சிரமத்தின் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டியது. சமமான இறையாண்மை அடிப்படை, சர்வதேச சட்டக் கோட்பாடு, பலதரப்புவாத வழிமுறை, மக்களின் நலன் இலக்கு, பயன் தரும் ஒத்துழைப்பு உத்தரவாதம் ஆகியவை கொண்ட இந்த ஆட்சி முறை, கூட்டு கலந்தாய்வு, கட்டுமானம் மற்றும் பகிர்வு உடைய கோட்பாட்டை உண்மையாகச் செயலாக்கப்படக் கூடிய அமைப்பு முறையாக மாற்றியுள்ளது.
உலக வளர்ச்சி முன்மொழிவு, உலக பாதுகாப்பு முன்மொழிவு, உலக நாகரிக முன்மொழிவு ஆகியவை அடுத்து, சீனா முன்வைத்த முக்கிய முன்மொழிவாக உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவு விளங்குகிறது. மனிதர் பொது எதிர்கால சமூகத்துக்கு சீனா வழங்கிய இன்னொரு ஞானம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.