அமெரிக்காவில் பணிபுரிய வழங்கப்படும் மிகவும் பிரபலமான H-1B விசா வழங்கும் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ‘லாட்டரி’ (குலுக்கல்) முறையை ரத்து செய்துவிட்டு, அதிக சம்பளம் மற்றும் அதிகத் திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் புதிய விதியை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) கொண்டு வந்துள்ளது.
இந்தப் புதிய விதி பிப்ரவரி 27, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும், 2027 நிதியாண்டு உச்சவரம்பு பதிவு பருவத்திற்கு இது பொருந்தும் என்றும், அந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கும் வேலைகளுக்கான பதிவுகள் மார்ச் 2026 இல் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் H-1B விசா குலுக்கல் முறை ரத்து: டிரம்ப் அரசு அதிரடி!
