2025 நீதி கடமை இராணுவப் பயிற்சி குறித்து சீனாவின் அறிமுகம்

சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சாங் சியௌகாங் 29ஆம் நாள், சீன மக்கள் விடுதலை படையைச் சேர்ந்த கிழக்குப் போர் மண்டலப் பிரிவின் 2025 நீதி கடமை இராணுவப் பயிற்சி குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அவர் கூறுகையில்,

இப்பயிற்சி, தைவான் சுதந்திர பிரிவினைச் சக்தி மற்றும் வெளிபுற தலையீட்டு சக்திக்கு கடும் எச்சரிக்கையாக விளங்குகிறது. நாட்டின் அரசுரிமை பாதுகாப்பு மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டைப் பேணிக்காப்பதற்கும் தேவையான நடவடிக்கையாகும் என்றார்.

சமீபத்தில், வெளிபுற சக்தி தைவான் பிரச்சினை குறித்து அடிப்படை எல்லையைத் தாண்டி செயல்படுத்தி, தைவான் நீரிணை இரு கரைகளுக்கிடையில் பகைமை நிலைமையைத் தீவிரமாக்கி, சீனாவின் அரசுரிமை பாதுகாப்புக்கு கடும் தீங்கு விளைவித்துள்ளது. தைவான் நீரிணையின் அமைதி மற்றும் நிதானத்தை கடுமையாகப் பாதித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 

தைவான் சுதந்திரம் என்பது தைவான் நீரிணையின் அமைதியுடன் ஒருபோதும் ஒத்துபோக முடியாது. தொடர்புடைய நாடுகள் தங்களது கற்பனையைக் கைவிட வேண்டும். சொந்த நாட்டின் மையமான நலன்களைப் பேணிக்காக்கும் சீனாவின் மன உறுதிக்கு அறைகூவல் விடக் கூடாது. தைவான் ஜனநாயக முன்னேற்ற கட்சி வெளிபுற சக்தியைச் சார்ந்திருந்து ஆயுத ஆற்றலின் மூலம் நாட்டின் ஒன்றிணைப்பை மறுக்கும் முயற்சி தோல்வியிலேயே முடியும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author