இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரரான அனில் மேனன், ஜூன் 2026இல் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) தனது முதல் பயணத்தை மேற்கொள்வார் என்று நாசா அறிவித்துள்ளது.
அவர் எக்ஸ்பெடிஷன் 75 இன் ஒரு பகுதியாக இருப்பார் மற்றும் கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ரோஸ்கோஸ்மோஸ் சோயுஸ் MS-29 விண்கலத்தில் ஏவப்படுவார்.
இந்தக் குழுவில் ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோட்டர் டுப்ரோவ் மற்றும் அன்னா கிகினா ஆகியோரும் அடங்குவர்.
அவர்கள் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ISS-இல் செலவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026இல் விண்வெளிக்குச் செல்லும் மற்றுமொரு இந்திய வம்சாவளி விண்வெளி வீரர்- அனில் மேனன்
