நவ சீனா நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்த “எனது சீனக் கதை”என்னும் சிறப்பு நிகழ்வு செப்டம்பர் 17ஆம் நாள் நைஜீரியாவின் அபுஜா நகரிலும், 19ஆம் நாள் சௌதி அரேபியாவின் ரியாத் நகரிலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறைத் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநருமான ஷென் ஹாய்சியொங் காணொளி வழியாக உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், 60க்கும் மேலான நாடுகளைச் சேர்ந்த நண்பர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, சீனா பற்றிய 1600க்கும் மேலான கதைகளை எடுத்துக்கூறினர்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் உணர்வுகளுக்கும் பண்பாட்டுக்கும் இடையிலான ஆழ்ந்த ஒன்றிணைப்பை இது பிரதிநிதித்துவப்படுத்தியதோடு, அமைதி மற்றும் இனிமையான வாழ்க்கையின் மீதான பல்வேறு நாட்டு மக்களின் பெரும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தியது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வு, உலக நவீனமயமாக்கத்துக்கு புதிய வாய்ப்புகளை வழங்கி, நாகரிகப் பரிமாற்றத்தை விரிவுபடுத்தியது. சீன ஊடகக் குழுமம், சர்வதேசப் பண்பாட்டுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துதல், உலக நாகரிகப் பேச்சுவார்த்தையை முன்னேற்றுதல், மக்களுக்கிடையிலான புரிந்துணர்வைத் தூண்டுதல் ஆகியவற்றைப் பொறுப்புகளாக கொண்டு, மனித குலப் பொது எதிர்காலச் சமூகத்தின் உருவாக்கத்தை முன்னேற்றுவதற்குப் பங்காற்றும் என்று தெரிவித்தார்.