மக்களவை தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே போட்டியிடமாட்டார் என தகவல் 

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் நடந்த பேச்சுவார்த்தையின் போது கர்நாடகாவின் குல்பர்கா தொகுதியில் கார்கேவை நிற்க வைப்பது குறித்து கட்சி தலைவர்கள் விவாதித்தனர்.

ஆனால், அவர் தனது மருமகன் ராதாகிருஷ்ணன் தொட்டமணியை அந்த தொகுதிக்கு பரிந்துரைக்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் என்டிடிவியிடம் தெரிவித்துள்ளன.

கார்கே குல்பர்கா தொகுதியில் இருந்து இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் 2019 இல் அந்த தொகுதியில் நின்று தோல்வியடைந்தார்.

எனவே, அவர் தற்போது ராஜ்யசபா எம்பியாக பணியாற்றி வருகிறார். அவர் ராஜ்யசபாவின் எதிர்க்கட்சி தலைவர் ஆவார். ராஜ்யசபாவில் அவரது பதவிக்காலம் இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author