பிப்ரவரி 19ஆம் தேதி உத்தரப் பிரதேசம் செல்லும் பிரதமர் மோடி ஸ்ரீ கல்கி தாம் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 19 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் செல்கிறார். காலை 10:30 மணியளவில், சம்பல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கல்கி தாம் கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். ஸ்ரீ கல்கி தாம் கோவிலின் மாதிரியையும் பிரதமர் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இந்த விழாவில் ஸ்ரீ கல்கி தாம் நிர்மாண் அறக்கட்டளை தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் உள்ளிட்ட கலந்துகொள்கின்றனர்.
பிற்பகல் 1:45 மணியளவில், 2023 ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற உத்தரப்பிரதேச உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2023 (UPGIS 2023) இன் போது பெறப்பட்ட முதலீட்டு திட்டங்களுக்கான நான்காவது அடிக்கல் நாட்டு விழாவில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பிலான 14000 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உணவு பதப்படுத்துதல், வீட்டுவசதி & ரியல் எஸ்டேட், பொழுதுபோக்கு, கல்வி போன்ற துறைகளுடன் தொடர்புடையவை. இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள், உலக மற்றும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள், தூதர்கள், சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட 5000 பேர் கலந்துகொள்கின்றனர்.