ஆபரணம், ஆடம்பரம் என்பதை தாண்டி சேமிப்பின் முதல் படியாக தங்கத்தை கருதி வரும் இந்தியர்களுக்கு அண்மைக் காலமாக அதன் விலையேற்றம் கடும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலை ஏறத்தாழ ஆயிரத்து 200 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
செப்டம்பர் 2 ஆம் தேதி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,725க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.77,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று செப்டம்பர் 3 ஆம் தேதி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,805-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.78,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8.115-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 9 நாள்களில் தங்கம் விலை ₹4,000 அதிகரித்த நிலையில், இன்று குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை, 10-வது நாளான இன்று சற்று குறைந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹78,360-க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹9,795-க்கும் விற்பனையாகிறது.