விஜய்யின் 69-வது மற்றும் அவரது இறுதி திரைப்படமாக கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிகப்பிரம்மாண்டமாக நடைபெற தயாராகி வருகிறது.
இந்த நிலையில் படத்தின் மூன்றாவது பாடலான ‘செல்ல மகளே’ என விஜய்யின் குரலில் ஒலிக்கும் பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் இசை வெளியீடு வரும் டிசம்பர் 27 (சனிக்கிழமை), மலேசியாவில் நடைபெற உள்ளது.
இதற்காக மலேசிய தலைநகரில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது ஒரு சாதாரண ஆடியோ வெளியீட்டு விழாவாக இல்லாமல், அனிருத் ரவிச்சந்தரின் நேரடி இசை நிகழ்ச்சியுடன் கூடிய ஒரு மெகா விழாவாக திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படம் ஜனவரி 9 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
விஜய் குரலில், ‘ஜனநாயகன்’ படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகிறது
